நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காவின் ஊழியர்களுக்கும், உடன் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை பொங்கல் பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் இணைந்து தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் சென்னை அடையாறு தொல்காப்பிய பூங்கா மற்றும் ஐஐடி வளாகத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தொல்காப்பிய பூங்கா ஊழியர்களுடனும் சக நடைபயிற்சியாளர்களுடனும் முதலமைச்சர் உரையாடினார்.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தொல்காப்பிய பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தன்னோடு நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.







