அமெரிக்கா, விர்ஜீனியா மாகாணத்தில் பள்ளி ஆசியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விர்ஜீனியா மாகாணத்தில் ரிட்னெக் என்ற ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த 30 வயதுடைய ஆசிரியைக்கும் 6 வயது மாணவனுக்கும் வாக்குவாதம் எற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே, அந்தச் சிறுவன் தனது துப்பாக்கியால் அந்த ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் ஆசிரியைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபற்றி பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்க்கர் கூறுகையில், ”இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதை நாம் தடுக்க வேண்டும். அதை அனைவருமே உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஸ்டுவ் ட்ரூ கூறும்போது, ஆசிரியை பலத்த காயமடைந்து உள்ளார். காயம் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ளது. 6 வயது மாணவனை காவலில் எடுத்து உள்ளோம். இந்த சம்பவம் விபத்தாக நடந்து போல் தெரியவில்லை. வேறு மாணவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவும் இல்லை. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 44,000-ஆக இருக்கலாம் என உத்தேசிக்கப்படுகிறது. இதில் பாதி எண்ணிக்கை கொலை, விபத்து மற்றும் சுய பாதுகாப்பு அடிப்படையில் நடந்திருக்கலாம் என்றும் மீதமுள்ள பாதி மரணங்கள் உயிரிழப்பாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.