சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கோரி கடந்த 52 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்கல்லூரியை தமிழக சுகாதாரத் துறையுடன் இணைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும் கல்வி கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் குறித்து தகவலறிந்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.