கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி அளவு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், நாளுக்கு…

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி அளவு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது எனவும்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது எனவும், கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1414870647147139074

மேலும், தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கவேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு தற்போது ஒதுக்கப்படும் தடுப்பூசி அளவு ஆயிரம் நபர்களுக்கு 302 என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திட வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.