உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கோரி முதலமைச்சர் கடிதம்

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கான இறக்குமதி வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கான இறக்குமதி வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மரபணு கோளாறுக்கான சிகிச்சை மேற்கொள்ள ஒரு நபருக்கு 16 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என கடித்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்ய சுங்கவரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், முதுகெலும்பு தசை சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கான இறக்குமதி வரிகளுக்கு விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1414893113408061443

தான் எழுதிய கடிதத்தை ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக இதே போல அரிய வகை நோய்க்கு சிகிச்சை பெற மருந்து இறக்குமதி செய்யப்பட்டதில் மத்திய அரசு வரி தள்ளுபடி செய்தது. தற்போது இந்தமுறையும் விரி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.