அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 24-ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து, 25-ஆம் தேதி துபாய் கண்காட்சியில் இந்திய அரங்கில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள், பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்தார். அந்த சந்திப்பை தொடர்ந்து, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், துபாய் வாழ் தமிழ் மக்களை சந்தித்து உரையாடினார்.
தொடர்ந்து 27ஆம் தேதியான நேற்று, museum of the future-ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அவர், துபாயிலிருந்து அபுதாபி புறப்பட்டு சென்றார். இந்நிலையில், இன்று அபுதாபியில் நடைபெறும் நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளதாகவும், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம் அமைத்ததற்கு தமிழ் அமைப்புகள் சார்பாக அபுதாபியில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாகவும்,
அண்மைச் செய்தி: மனைவியை கேலி செய்ததால் தொகுப்பாளரை அறைந்த ஸ்மித்
மேலும், முதலீட்டாளர்களுடனான சந்திப்பிற்கும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு – அபுதாபி இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







