புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
திருவாரூர் பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் சென்னை திரும்பும் வழியில், புதுச்சேரி சென்றார். வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் திமுக அமைப்பாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், புதுச்சேரியில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் லெட்சுமணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: