முக்கியச் செய்திகள் உலகம்

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ், உலகின் மிகப்பெரிய அறக்கட்டளையான கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இருந்து, 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸும், அவரது மனைவி மெலின்டா பிரெஞ்ச் கேட்ஸும் அண்மையில் விவகாரத்து செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நிர்வகித்து வந்த கேட்ஸ் அறக்கட்டளை, பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகின் மிகப்பெரிய தனியார் அறக்கட்டளையான இது, வருடந்தோறும் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட நலப்பணிகளுக்காக, இந்திய மதிப்பில் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது  இதனிடையே, தங்களது விவகாரத்து முடிவால் அறக்கட்டளை செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்றும், தொடர்ந்து பொறுப்பில் நீடிப்போம், எனவும் இருவரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பில் கேட்ஸும் மெலின்டா கேட்ஸும் இணைந்து, அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பில் தொடர முடியாது, என முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து, தற்போது அறக்கட்டளையின் இணை தலைவராகவும் அறங்காவலராகவும் உள்ள மெலின்டா, தனது பொறுப்புகளில் இருந்து விலகுவார் என கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர், கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை, பில் கேட்ஸ் முழுமையாக ஏற்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!

Jeba Arul Robinson

சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

Jeba Arul Robinson

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?

Hamsa