“உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகர் கமலாலயத்தில் உள்ள அவரது உருவப்…

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகர் கமலாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு, எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளதாகவும், அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும், எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.