முக்கியச் செய்திகள் உலகம்

106 நாட்களுக்கு பின்னர் பயணத்தை தொடங்கியது எவர் கிவன்

சூயஸ் கால்வாயிலிருந்து எவர் கிவன் வர்த்தகக் கப்பல் 106 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

உலகின் பிஸியான நீர்வழி போக்குவரத்து தடங்களில் ஒன்றால் சூயஸ் கால்வாயில் கடந்த மார்ச்சில் பனாமா நாட்டினுடைய மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர் கிவன் தரை தட்டி நின்றது. இதனால் சுமார் 400 கப்பல்கள் அந்த கால்வாயின் வழியே பயணிக்க முடியாமல் சிக்கித் தவித்தது. இதனை தொடர்ந்து ஒரு வாரக் காலமாக கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இந்த சரக்கு கப்பலை சூயஸ் கால்வாய் நிர்வாகம் வெற்றிகரமாக மீட்டது. இதனையடுத்து தரைதட்டி நின்ற எவர் கிவன் மார்ச் 29ல் மீண்டும் கால்வாயில் மிதக்கத் தொடங்கியது.
300 மீட்டர் அகலம் கொண்ட இந்த கால்வாயானது மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கிறது. இந்த கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த 400 மீட்டர் நீளம் கொண்ட எவர் கிவன், அதிவேக காற்று காரணமாக பாதையிலிருந்து விலகி தரைதட்டி நின்றது.

இதனைத் தொடர்ந்து மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் சுமார் 30,000 கன மீட்டர் மணல் அப்புறப்படுத்தப்பட்டு, 11 இழுவை விசைப்படகுகள் மற்றும் 2 சக்திவாய்ந்த இழுவை படகுகள் மூலம் 2,24,000 டன் எடை கொண்ட எவர் கிவன் மீட்கப்பட்டது. இந்த பணியை சூயஸ் கால்வாய் நிர்வாகமும், டச்சு நாட்டின் ஸ்மித் இன்டர்நேஷ்னல் நிறுவனமும் இனைந்து வெற்றிகரமாக முடித்துள்ளது.

கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டாலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகை செலுத்தும் வரை சூயஸ் கால்வாயை விட்டு செல்ல கப்பல் அனுமதிக்கப்படவில்லை. சுமார் 106 நாட்களுக்கு பின்னர் இழப்பீட்டுத் தொகை செலுத்துவதாக எவர் கிவன் கப்பலின் அதிகாரிகள் அனைவரும் கையெழுத்திட்ட பின்னர் கப்பல் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக சுமார் 900 மில்லியன் டாலர் இழப்பீட்டுத்தொகையை சூயஸ் கால்வாய் நிர்வாகம் கோரியிருந்தது. இந்த தொகை பின்னர் 550 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. இதனையடுத்து கப்பல் கால்வாயை விட்டு வெளியேற அனுமதியளித்தது சூயஸ் நிர்வாகம்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு

Saravana Kumar

ரியல்மியின் புதிய பட்ஜெட் செல்போன் இந்தியாவில் அறிமுகம்

Gayathri Venkatesan

குறுக்க இந்த ‘ஜார்வோ69’ வந்தா?

Halley karthi