#GandhiJayanthi | காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை,எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளான காந்தி…

Chief Minister M.K.Stal's floral tribute to Mahatma Gandhi statue

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை,எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளான காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : Rameshwaram | பாம்பன் புதிய ரயில் பாலம் | இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கும் சோதனை வெற்றி!

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 156 -வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.