விஷச்சாராய விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமைச்செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.   கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை தலைமைச்செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  சட்டப் பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு,  பொன்முடி,  முத்துசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்  ஆலோசனையில் பங்கேற்றனர்.,  டிஜிபி,  உளவுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.