திருச்சியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் ரூ. 290 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை புதூர் பகுதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விரிவுபடுத்தும் வகையில் கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : “நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – திருப்பூரில் சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து அமைச்சர் ரகுபதி பதில்!

இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதன்படி, திருச்சியில் ரூ.290 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளது. திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ. அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 4.57 ஏக்கரில் 1,97,337 சதுரடி அளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமையவுள்ளது.

இந்த நூலகத்திற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மார்ச் 21) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.