“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – அமைச்சர் துரைமுருகன்

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் எனும் தலைப்பில் …

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்
பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் எனும் தலைப்பில்  பரப்பரை கூட்டம் நடைபெற்றது. இதில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். அதேபோல திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன்  மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேசியதாவது..

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் 53 ஆண்டுகள் இருந்துள்ளேன், ஆனால் அவரை விஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்” என துரை முருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.