வெற்றிப் பயண திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைசர் ஜோசேப் விஜய்!

சென்னை கோயம்பேட்டில் வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த திமுக அரசு அறிமுகம் செய்தது. இதனிடையே தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பஸ்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது..

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், மகாத்மா காந்தி பிறந்த நாளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவச அரசு பேருந்து பயணம் மேற்கொண்டு பயனடையலாம்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.