தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,775-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ 5,000 உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




