முதலமைச்சர் – ஆளுநர் முரண்பாடு; தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் – ஆர்.பி.உதயக்குமார் கருத்து

முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் முரண்பாடு இருக்கும் போது, ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை முதலமைச்சரிடம் எப்படி கேட்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை…

முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் முரண்பாடு இருக்கும் போது, ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை முதலமைச்சரிடம் எப்படி கேட்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்த்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு குறித்து முதலமைச்சருக்கு ஆளுநர் 5 பக்க அளவில் எழுதிய கடிதம் வெளியாகியது. அதில் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அட்டர்னி ஜெனரல் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன். செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் உத்தரவானது, என்னிடமிருந்து அடுத்து தகவல் தெரிவிக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் கழகத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை நகர் கழக நிர்வாகிகளிடம் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் ஏற்கனவே முரண்பாடுகள் உள்ள போது, ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று முதலமைச்சரிடம் எப்படி கேட்க முடியும். ஆளுநராக தான் முடிவெடுத்து பரிந்துரை அனுப்பியுள்ளார். எப்போதுமே சட்டரீதியாக ஒரு பரிந்துரை என்பதை முதலமைச்சரிடம் கேட்டுத் தான் கொடுக்க வேண்டும். தற்போது பரிந்துரை தான் முரண்பாடாக உள்ளது.

இவ்வளவு பெரிய பண ஊழல், மற்ற குற்ற வழக்குகள் போல இல்லை. அமலாக்கத்துறை மூலம் பல விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரதமரே போபலில் ’திமுகவிற்கு ஓட்டு போட்டால் கருணாநிதிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் போடும் ஓட்டு’ என்று சொல்லியுள்ளார். அதனால் தான் உதறல் ஏற்பட்டு முதலமைச்சர் உழறியுள்ளார்.”

இவ்வாறு ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.