மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…

மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம் தேதி தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக சென்று பல்வேறு திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியை தொடங்கினார்.

இதையடுத்து இம்மாதம் 15 மற்றும்16 ஆகிய தேதிகளில் சேலம் மண்டலத்தில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 5 மற்றும் 6-ம்  தேதிகளில் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அப்போது மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அரசுப் பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.