முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குநர்களுக்கு பி ஐ எஸ்,ISSO தரசான்றிதழ் தொடர்பாக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 69 வது கூட்டுறவு வார விழா கடந்த 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மிக சிறப்பாக நடைபெற உள்ளது. கூட்டுறவு பொருட்களை தரம் உயர்த்தி வெளிநாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக 22923 கூட்டுறவு மையங்கள் உள்ளது.அதில் 1.6 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மையங்களில் 67 ஆயிரம் கோடி வைப்பு நிதி உள்ளதாக கூறிய செயலாளர் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு வேளாண் கடன் மட்டும் 10,292 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தாண்டு 12000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இதுவரை 8.97 லட்சம் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு 1.48 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு 794 கோடி கடன் வழங்க பட்டுள்ளது. அதில் டெல்டா பகுதி மாவட்டங்களில் மட்டும் 1.64 லட்சம் விவசாயிகளுக்கு குருவை பருவத்தில் 1022 கோடி கடன் வழங்க பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் எனவும் பேசினார்.

நடப்பாண்டில் கால்நடை துறையில் 1.67 லட்சம் மக்களுக்கு 700 கோடி மேல் கடன் வழங்க பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் முதற்கட்டமாக 3500 கடைகளை முழுமையாக கணினிமயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவும் அடுத்த 6 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

தனியார் வங்கிகளை விஞ்சும் அளவிற்கு கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள 33,000 நியாய விலை கடைகளுக்கும் ISO தர சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தற்போது வரை 3662 ISO-2015 கடந்த நான்கு மாதங்கங்களில் பெற பட்டுள்ளதாக கூறினார்.

மிக மோசமான கடைகளை மேம்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரிசி கடத்தல் தொடர்பாக 12,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட 12892 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் நேரடியாக அரிசி கடத்தலில் ஈடுபட்ட 129 பேர் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மாநில எல்லைகளில் தனி கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என பேசினார்.

அரிசி கடத்தலில் திருவள்ளூர் நிர்வாகத்தை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது அது மாநில எல்லையில் கடைசி முக்கிய வழித்தடமாக இருக்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிக அரிசி கடத்தல் இருக்கிறது என கருத்தில் கொண்டு கொள்ள முடியாது. 5000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது கேமராக்களை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு துறையின் சார்பில் பொதுமக்களுக்கு இந்த ஆண்டு ரொக்கம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அது அரசின் கொள்கை முடிவு அரசின் கொள்கை முடிவை பொறுத்து துறை அதை சிறப்பாக செயல்படுத்தும் எனவும் கூரினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரையில் கோயில் யானைகளுக்கு ரூ.80 லட்சத்தில் நினைவு மண்டபம்-ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!

Web Editor

இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை எச்சரிக்கை

Halley Karthik

தமிழ்நாடு நாள் அறிவிப்பு தேவையற்ற குழப்பம்: சீமான்

EZHILARASAN D