சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி, போலீசார் மற்றும் அறநிலையத்துறையினர் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சியை, தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, கனக சபை மீது பக்தர்கள் ஏற 4 நாட்களுக்கு அனுமதியில்லை என தீட்சிதர்கள் தெரிவித்தனர். எனவே, போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்களை கனக சபையில் ஏற்றும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் மற்றும் தீட்சிதர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீட்சிதர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே, காவல்துறை மற்றும் அறநிலைத்துறையை சேர்ந்த 6 பேர் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியே வந்தபோது தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : Stories Share செய்ய விரும்புவோரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே Telegram-ன் புதிய அப்டேட்!
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரலாற்றில் கறுப்பு பக்கம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம் எனவும் அவர் கூறினார்.







