பன்னீர் டிக்கா சாண்ட்விச் பதிலாக சிக்கன் சாண்ட்விச்! ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய பெண்!

பன்னீர் சாண்ட்விச்க்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பப்பட்டதால் பெண் ஒருவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் நீராலி.  இவர் கடந்த…

பன்னீர் சாண்ட்விச்க்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பப்பட்டதால் பெண் ஒருவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.   

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் நீராலி.  இவர் கடந்த 3ம் தேதி இரவு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் ஆர்டர் செய்துள்ளார்.

அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது. அதை அறியாமல் அந்த பெண் சாப்பிட்டுள்ளார்.  பின்னர் இது சிக்கன் சாண்ட்விச் என்று தெரிந்ததும் கோபமடைந்த அவர் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.  தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பாஜகவை விமர்சித்து பெண் அரசியல் தலைவர் பேசிய வீடியோ பழையது – உண்மை சரிபார்ப்பில் தகவல்!

இந்நிலையில்,  இதனை விசாரித்த சுகாதாரத்துறை VRYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதே தவறை மீண்டும் செய்தால்,  இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த பெண் கூறியதாவது :

“நான் ஆர்டர் செய்தது பன்னீர் டிக்கா சாண்ட்விச்,  ஆனால் சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அகமதாபாத் மாநகராட்சி துணை சுகாதார அதிகாரியிடம் புகார் அளித்து,  ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.

ஆனால்,  மாநகராட்சி துணை சுகாதார துறை அந்த உணவகத்திற்கு ரூ. 5000 மட்டுமே அபராதம் விதித்தது.  இந்த அபராதம் தனக்கு போதாது.  தான் கோரிய இழப்பீட்டை வழங்கவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுவேன்”

இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.