ஒரு வருடமாக சூப்பர் மார்க்கெட் மேற்கூரையில் வசித்து வந்த பெண்! ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேற்கூரையில் 34 வயதுடைய பெண் ஒருவர் ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் ஃபேமிலி ஃபேர் என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது.   இந்த…

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேற்கூரையில் 34 வயதுடைய பெண் ஒருவர் ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் ஃபேமிலி ஃபேர் என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது.   இந்த சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையில்,  கிட்டதட்ட ஒரு வருடமாக 34 வயதுடைய பெண் ஒருவர் வசிந்து வந்துள்ளார்.  இச்சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதனை கடந்த ஏப்.23 ஆம் தேதி கண்டறிந்துள்ளனர்.  அந்த மேற்கூரையில் 5 அடி (1.5 மீட்டர்) அகலமும் 8 அடி (2.4 மீட்டர்) உயரமும் கொண்ட ஒரு கதவு  உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த மேற்கூரையில்,  ஒரு சிறிய மேசை, கணினி,  காபி மேக்கர்,  அவரின் உடை, பிரிண்டர் மற்றும் வீட்டில் வைத்திருக்கக் கூடிய சில பொருள்களையும் அவர் வைத்திருந்திருக்கிறார்.  அவர் மேலே ஏறி செல்வதற்கு ஏணியை பயன்படுத்தினாரா என தெரியவில்லை என்றும் அவர் சூப்பர் மார்க்கெட் வழியாக மேலே சென்றவாறும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மற்ற கட்டிடங்கள் மூலமாக சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரைக்கு சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் வேறு இடத்தில் பணி புரிவதாகவும்,  ஃபேமிலி ஃபேர் சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையில் ஒரு வருடமாக வசிப்பதாகவும் கூறினார்.  அந்த பெண் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.