சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்பு, இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஆண்டு யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பிறகு இந்த தண்டனயை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீடு செய்தனர். வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.







