முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் உடலுக்கு பதிலாக, வேறு சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 52 ) என்ற நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவர் உற்றார் உறவினர்கள் உடலை நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில், ஆதிவராகநத்தம் பகுதியில் அந்த நபர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் வேறு ஒரு உடலை கொண்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள், இதுதான் தங்களது உறவினர் ஜாகீர் உடல் என்றும் அவர்கள் புதைத்த உடல் ஆறுமுகம் என்ற மற்றோரு நபரின் பிரேத உடல் எனத் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த, ஜாகீர் உறவினர்கள், ஊழியர்கள் கொண்டு வந்த உடலை சென்று பார்த்தனர். அது ஜாகீர் உடல்தான் எனத் தெரியவந்தது. அதையடுத்து ஜாகீர் உடலை மற்றொரு குழிதோண்டி நல்லடக்கம் செய்தனர்

முன்னதாக புதைக்கப்பட்ட ஆறுமுகம் என்ற நபரின் சடலத்தை தோண்டி எடுத்த சுகாதாரத்துறையினர், அதனை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:

Related posts

கணவர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மனைவி!

Jeba

“தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்

Niruban Chakkaaravarthi

போர்க்குற்ற விசாரணை; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Saravana Kumar