செஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரை

சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பினர் இணைந்து வெளியிட்டனர். அதில், முதலமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க…

சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பினர் இணைந்து வெளியிட்டனர். அதில், முதலமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த நவீன உலகில், வரலாறுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறது தமிழ்நாடு. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருங்கால சந்ததியினருக்கு மறக்கமுடியாத பல பொற்கதைகளை எழுத ஆயத்தமாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் முழு முயற்சியால் வருகின்ற ஜூலை 28 தேதி துவங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இப்போதே பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன.

அண்மைச் செய்தி: ‘“அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்’

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கும் செஸ் போட்டி என்ற பெருமையைப் பெற்றதோடு மட்டும் இல்லாமல், உலக சாதனை புத்தகத்தில் சென்னை மாமல்லபுரம் இடம் பிடிக்க உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பிரத்தியேகமாக ஏந்தப்படும் தீபம் போல, வரலாற்றிலேயே முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு எனத் தீபம் ஒன்றை அறிமுகம் செய்து, அவை இந்தியாவின் 26 மாநிலங்களுக்கும், ஒவ்வொரு கண்டத்தில் உள்ள நாடுகளின் பெரு நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியில் சென்னை வந்தடையும் என உலக சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வரும் காலங்களில் இந்தியாவிலிருந்தே செஸ் ஒலிம்பியாட் தீபம் துவங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது உலக சதுரங்க கூட்டமைப்பு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்றைய தினம், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான இலச்சினை, சின்னம் மற்றும் 50 நாட்கள் கவுண்டவுன் ஆகியவற்றின் துவக்க விழா, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அனைவரின் எதிர்பார்ப்பின் விளிம்பிலிருந்த சின்னம் குறித்த சிந்தனைகள், பல பேரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில், சதுரங்க விளையாட்டில் இருக்கும் நைட் போலவே ஒரு குதிரையை வடிவமைத்து, வணக்கம் சொல்லுவது போல, சின்னத்தைச் சித்தரித்துள்ளது தமிழ்நாடு அரசு.

இதில் கூடுதல் சிறப்பாக, அந்த குதிரை சின்னம் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை அணிந்திருந்தது அனைவரின் எதிர்பார்ப்புக்கும் விருந்தாக அமைந்தது. ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்தை வெளியிட்டுள்ள முதலமைச்சர், அதற்குத் தம்பி எனப் பெயர் சூட்டி இருப்பது, தற்போது தமிழகத்தில் பேசு பொருள் ஆகியிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு இன்னும் 49 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்னும் எத்தனை வரலாறுகளைத் தமிழகத்தின் கல்வெட்டுகளில் பதிக்க உள்ளது என்பதை மாமல்லபுரம் கடற்கரை தான் சொல்ல வேண்டும்.

– செய்தியாளர் நாகராஜன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.