முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றுப் போட்டிகளின் விவரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 10-வது சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய B அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும், இந்திய A அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும் உள்ளனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளைக் களம் இறக்கியுள்ளது. 9-வது சுற்று ஆட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. இந்த 9-வது சுற்றில் இந்தியா 1-வது அணி பிரேசிலுடனும் இந்தியா 2-வது அணி அஜர்பைஜானுடனும் மோதின. இந்த நிலையில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 9-வது சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இன்று ஓபன் பிரிவில், இந்தியா A மற்றும் ஈரான் அணியும், இந்தியா B மற்றும் உஸ்பெகிஸ்தான் அணியும், இந்தியா C மற்றும் ஸ்லோவேக்கியா அணியும் மோத இருக்கின்றன. மகளிர் பிரிவில், இந்தியா A மற்றும் கஜகஸ்தான் அணியும், இந்தியா B மற்றும் நெதர்லாந்து அணியும், இந்தியா C மற்றும் ஸ்வீடன் அணியும் மோத இருக்கிறது.

அண்மைச் செய்தி: ‘விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து’

தரவரிசை பட்டியல் ஓபன் பிரிவில், 1 வது இடத்தில், உஸ்பெகிஸ்தான் அணியும், 2 வது இடத்தில் இந்தியா பி – அணியும், 3 வது இடத்தில் அர்மேனியா அணியும், 4 வது இடத்தில் இந்தியா ஏ அணியும், 5 வது இடத்தில் நெதர்லாந்து அணியும், 6 வது இடத்தில் அஸர்பைஜான் அணியும், 7 வது இடத்தில் துருக்கி அணியும், 8 வது இடத்தில், ஈரான் அணியும், 9 வது இடத்தில், அமெரிக்கா அணியும், 10 வது இடத்தில், செர்பியா அணியும், 23 வது இடத்தில், இந்தியா சி அணியும் உள்ளன.

தரவரிசை பட்டியல் மகளிர் பிரிவில், 1 வது இடத்தில், போலந்து அணியும், 2 வது இடத்தில்,இந்தியா ஏ அணியும், 3 வது இடத்தில், கஜகஸ்தான் அணியும், 4 வது இடத்தில், ஜார்ஜியா அணியும், 5 வது இடத்தில், உக்ரைன் அணியும், 6 வது இடத்தில், அஸர்பைஜான் அணியும், 7 வது இடத்தில், அர்மேனியா அணியும், 8 வது இடத்தில், ஜெர்மனி அணியும், 9 வது இடத்தில், இந்தோனேசியா அணியும், 10 வது இடத்தில், இந்தியா 2 அணியும், 16 வது இடத்தில், இந்தியா சி அணியும் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

EZHILARASAN D

நடிகர் விவேக்கின் இடத்தை நிரப்பும் பொறுப்பு எனக்கு இருக்கிறது – வடிவேலு

Halley Karthik

தேர்தல் பரப்புரைக்குத் தடை: போராட்டத்தில் இறங்கும் மமதா பானர்ஜி

Gayathri Venkatesan