சென்னை பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிப் படுகொலை..!!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபல ரவுடியான டோக்கன் ராஜாவை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் மயிலாப்பூர், குமரன் நகர் பகுதி…

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபல ரவுடியான டோக்கன் ராஜாவை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் மயிலாப்பூர்,
குமரன் நகர் பகுதி சேர்ந்த டொக்கன் ராஜா (47).  இவர் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியாவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல்,
கட்டப்பஞ்சாயத்து என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள்  சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது

டோக்கன் ராஜா மயிலாப்பூர் பல்லாக்கு மாநகர் பகுதியில் இன்று இரவு 9.00 மணி அளவில் நடந்து சென்ற பொழுது முன்விரோதம் காரணமாக இவரை மர்ம கும்பல் பட்டாகத்திகளை கொண்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்து  தப்பித்து சென்றுள்ளனர்.

உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.