சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாய்கள் காரணமா?

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா…

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒரு பெண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சிங்கத்திற்கு அதிகம் பரவக்கூடிய கெனையின் டிஸ்டெம்பர் வைரஸ் (canine distemper virus/CDV)தொற்றும் ஏற்பட்டுள்ளது.


சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாகத் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் ப. கணேஷன் கூறுகையில், ‘சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படப் பூனைகள் காரணமாக இருக்கலாம். இது தொடர்பாக ஒரு முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வண்டலூர் பூங்காவின் உயர் அதிகாரி கூறுகையில், ‘சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுவரை சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்று வட்டாரத்தில் உள்ள தெரு நாய்களும், பூனைகளும் தொடர்ந்து அப்புறப்படுத்தப்படுகிறது.


மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குக் கீழ் இயங்கும் சிசெட்ஏ அமைப்பு ( இந்தியாவில் இருக்கும் எல்லா உயிரியல் பூங்காக்களை கண்காணிக்கும் அமைப்பு) வண்டலூர் உயிரியல் பூங்காவை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று டிசம்பர் 31, 2020ஆம் ஆண்டே கூறியிருக்கிறது. ஆனால் வண்டலூர் பூங்கா மறுசிரமைக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிங்கங்களுக்கு வழங்கப்படும் பீஃப் கறி மூலமாகவும் நோய் தொற்று பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பெரம்பூரில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கறிக்கடையில்தான் சிங்கங்களுக்கான பீஃப் கறி வாங்கப்படுவதாகப் பூங்கா தரப்பில் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.