தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டில் சர்வதேச விமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததையும், தற்போது 2வது அலை தணிந்து வரக்கூடிய சூழலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் நலன் கருதி கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.







