#ChennaiRains | ” தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்…

chennai, tambaram, heavyrains, knnehru

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (அக்-16ம் தேதி ) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், நேற்று நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது.

இதற்கிடையே, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்படப் பகுதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், மழையால் பாதிக்கப்படும் இடங்களை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையும் படியுங்கள் : கனமழை எதிரொலி | “#OnlineClass-களை தவிர்க்க வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!

மேலும், தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தடுப்பு சுவர் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது :

“தாம்பரம் மாநகராட்சியை பொருத்தவரையில் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் மற்றும் தேவையான உணவு பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. தாம்பரம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை மாநகராட்சிகளிலும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள் தயார் நிலையில் உள்ளது ” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.