டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும் தோனி செயல்படுகிறார். டிரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் தூதராக பிரபலமான ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தோனி அந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்தும் தூதராக இருப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஒப்பந்த விவரம் போன்றவை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

26 நகரங்களில் இயங்கும் 300 டிரோன்கள் மற்றும் 500 பைலட்கள் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் டிரோன் தயாரிப்பு வசதிகளை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

“கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் நானும் பங்கு பெற்றிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அந்நிறுவனத்தின் வளர்ச்சி, பிரத்யேக டிரோன் தீர்வுகளை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்று தோனி கூறினார்” என்று டிரோன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– சத்யா விஸ்வநாதன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.