மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் நிபந்தனைகளுடன் பயணிக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் பேருந்து…

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் நிபந்தனைகளுடன் பயணிக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை அனுமதிக்கப்பட்ட நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவை நாளை முதல் பொதுமக்கள் நிபந்தனைகளுடன் பயணிக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலக அடையாளம் கார்டை பயன்படுத்தி 24 மணி நேரமும் பயணிக்கலாம். அவர்களுக்கு சீசன் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களும் வழங்கப்படும்.

பெண்கள், குழந்தைகள் எல்லாம் நேரங்களிலும் எவ்வித தடையும் இன்றி பயணக்கலாம். ஆனால் ஆண்கள் கூட்டம் இல்லதா நேரங்களில் ஆண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் ஆகிய ஏழு மணி நேரமும் அதையடுத்து இரவு 7 மணி தொடங்கி கடைசி ரயில் வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களிலோ அல்லது ரயிலில் பயணிக்கும்போதோ முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னை இருந்தால் பயணிகள் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.