முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சென்னை : ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – கானா பாடகர் கைது

சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கானா பாடகர் உட்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி மாணவி வழக்கம்போல் பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே இரண்டு நபர்கள், டேல்கேட் பகுதியில் இருந்து, தங்கச்சாலை பகுதிக்கு செல்வதற்காக பயணித்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ஆட்டோ புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கியபோது மாணவிக்கு அந்த நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அதில் ஒரு நபர், கானா பாடகர் என்பதால், பாட்டு பாடியவாரே செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு ஆட்டோவில் வந்துள்ளனர். மாணவியின் மீது கானா பாடகரின் கை பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் மாணவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

 

அதில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கானா பாடகரான டோலக் ஜெகன் என்ற ஜெகதீஸ்வரன் என்பவரையும், கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதோடு, அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

Mohan Dass

கொலை முயற்சி: இளைஞர் கைது

Halley Karthik

ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி

G SaravanaKumar