முதலமைச்சர் தொகுதியிலேயே படகில் செல்லும் நிலை: அண்ணாமலை

மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.  சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை…

மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.


இந்த நிலையில் முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மழை பாதித்த பகுதிகளை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படகில் சென்றபடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து நியூஸ்7 தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில்,   “முதலமைச்சர் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் இதுபோன்று படகில் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மீட்புப் பணிக்காக வந்த பாஜகவினரை திமுகவை சேர்ந்தவர்கள் விரட்டியடித்தனர்” எனக் குற்றம்சாட்டினார்.


இது போன்ற பேரிடர் காலத்தில் அனைத்து கட்சிகளும்  ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற அண்ணாமலை,  மாநில அரசு உடனடியாக மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, பெருமழை குறித்து விரைவில் மத்திய அரசு நிவாரண தொகை குறித்து அறிவிக்கும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.