முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனையை வீழ்த்திய சிறுமி

சென்னை ஓபன் தொடரில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி 17 வயது சிறுமி லிண்டா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி, நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனைக்கான மார்கரெட் அமிர்தராஜ் விருது பெற்றார்.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் மற்றும் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்கிய ஒற்றையர் பிரிவில் முதல் காலிறுதி போட்டியில், கனடாவின் யூஜெனி பவுச்சார்ட், அர்ஜென்டினாவின் நதியா பொடோர்ஸ்கா ஆகியோர் விளையாடினார். இதில் நதியா பொடோர்ஸ்கா முதல் செட்டில் 1-6 என கைவிட்ட நிலையில் அடுத்தடுத்த இரண்டு செட்களையும், 6-4, 6-2 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை ஓபன் டென்னிஸ்-காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை | News7 Tamil

மற்றொரு ஆட்டத்தில் விளையாடிய சென்னை ஓபன் தொடரின் இளம் வீராங்கனையான செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, ரஷ்யாவின் வார்வரா கிரச்சேவாவை எதிர்த்து விளையாடிய நிலையில், அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 6-4, 6-3 என நேர் செட்களாக கைப்பற்றி அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டாம் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவிற்கு, தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சென்னை ஓபன் தொடரில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் தாயார் பெயர் கொண்ட விருதான, “மார்கரெட் அமிர்தராஜ் விருது” லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவிற்கு வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, இந்த பட்டத்தை நான் எதிர் பார்க்கவே இல்லை. இது எனக்கு கிடைத்ததற்கு நான் பெருமை படுகிறேன். இது என்னை மேலும் உறுதிப்படுத்தி கொள்ள மற்றும் நம்பிக்கையாக விளையாடுவதற்கு உண்டான பலத்தை கொடுக்கும். இன்று என்னை எதிர்த்து விளையாடிய வீராங்கனை நிறைய யுக்திகளை கையாண்டார். இருப்பினும், நான் சமாளித்து என் பங்களிப்பை கொடுத்து வென்றேன் என தெரிவித்தார்.

சென்னை ஓபன் டென்னிஸ்-காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை | News7 Tamil

பிறகு, ரோஜர் பெடரர் ஓய்வு குறித்து பேசிய அவர், நான் மற்றும் எனது அக்கா ஃபெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸை பார்த்து தான் வளர்ந்தோம். அவர்கள் தான் எங்களுக்கு எல்லா காலத்திலும் அவர்கள் முன்னோடியாக இருப்பார்கள். இந்த தலைமுறை பல வீரர் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கியுள்ளது. அல்கரஸ் போன்ற வீரர்களை உள்ளடக்கி, இனி இது எங்களுக்கான தலைமுறைக்கான பாதையாக இருக்க கூடும். ஆண்களுக்கு அதிக அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது பெண்களுக்கு குறைவான போட்டிகளே நடத்தப்படுகிறது. மேலும், பரிசுத் தொகையின் தொகையிலும் அதிக அளவில் வித்தியாசங்கள் இருக்கிறது. பெண்களுக்காக போட்டி நடத்துவதற்கு ஸ்பான்ஸர்கள் அதிக அளவில் வர வேண்டும் என தெரிவித்தார். காலிறுதி சுற்றுகள் அனைத்தும் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல’: நோய்த்தடுப்பு பிரிவு அறிக்கை

Halley Karthik

டி-20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இன்று மோதல்

Halley Karthik

பாலம் உடைந்ததால் கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அச்சம்

EZHILARASAN D