சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வீராங்கனைகளின் பட்டியலை உலக டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 250 புள்ளிகளுக்கான உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ள 21 வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 32 வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில், 21 பேர் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒருவர் சிறப்பு பங்கேற்பாளராகவும், 4 பேர் வைல்ட் கார்டு நுழைவிலும், 6 பேர் தகுதி சுற்றிலும் பங்கேற்க உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 29 ஆம் இடம் பிடித்துள்ள ஆலிசன் அமிர்தராஜ், 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அரையிறுதி சென்ற பெல்ஜியம் நாட்டை சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸ், செக் குடியரசின் 15 வயது இளம் வீராங்கனை லிண்டா ப்ருவிட்டோவா உள்ளிட்ட பலர் பங்கேற்று விளையாட உள்ளனர்.
இந்நிலையில் 21 பேர் கொண்ட நேரடி பங்கேற்பாளர்கள் பட்டியலை உலக டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டது.
1) அலிசன் ரிஸ்கே அமிர்தாராஜ் – 29 – அமெரிக்கா
2) எலிஸ் மெர்டென்ஸ் – 33 – பெல்ஜியம்
3) கரோலின் கார்சியா – 35 – பிரான்ஸ்
4) வர்வரா கிரச்சேவா – 60
5) மெக்டா லினேட் – 70 – போலந்து
6) ரெபேக்கா பீட்டர்சன் – 87 – ஸ்வீடன்
7) டாட்ஜனா மரியா – 93 – ஜெர்மனி
8) கியாங் வாங் – 103 – சீனா
9) ச்ளோ பக்குவெட் – 111 – பிரான்ஸ்
10) ரெபேக்கா மரினோ – 113 – கனடா
11) மோயுகா உச்சிஜிமா – 131 – ஜப்பான்
12) ஓசானா செலேக்மெடேவா – 145
13) அண்ணா பிளின்கோவா – 151
14) அனஸ்டாசியா காஸநோவா – 156
15) லிண்டா புருவிட்டோவா – 157 – செக் குடியரசு
16) கடர்சைனா காவா – 160 – போலந்து
17) யணினா விக்மேயர் – 162 SR – பெல்ஜியம்
18) விக்டோரியா ஜிமென்சா – 165
19) அரியன்னே ஹார்டோனா – 166 – நெதர்லாந்து
20) ஜோனே ஜூகர் – 167
21) கேட்டி சுவான் – 177
வரும் செப்டம்பர் மாதம் 12 முதல் 18 ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம்
டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடத்தி
திட்டமிடப்பட்டுள்ளது.