விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயின் சூப்பர் ஸ்டார் ரபேல் நடால். நள்ளிரவு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால், அமெரிக்கா வீரரான டெய்லர் ஹாரி பிரிட்ஸ் உடன் மோதினார். மிகவும் எளிதாக முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, பரபரப்பாக நடைபெற்று, விம்பிள்டன் ரசிகர்களுக்கு விருந்தளித்தது.
ஆட்டத்தின் முதல் செட்டை டெய்லர் 6-3 என கைப்பற்ற, இரண்டாம் செட்டை 7-5 என கைப்பற்றி சமன் செய்தார் நடால். மூன்றாம் செட்டை 6-3 என டெய்லர் கைப்பற்றி முன்னிலை வகித்ததை அடுத்து, அதிரடியாக இறங்கிய நடால் நான்காவது செட்டை 7-5 எனவும், ஐந்தாம் செட்டை 7-6 என்ற புள்ளிகளில் கைப்பற்றி, அனுபவம் நிறைந்த போட்டியாக மாற்றினார்.
அதே சமயம் நேற்று முந்தைய தினம் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவோக் ஜோகோவிச், இத்தாலியின் ஜென்னிக் சின்னரை எதிர்கொண்டு வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
எனவே ரபேல் நடால் மற்றும் ஜோகோவிச் ஆகிய முதல் நிலை வீரர்கள் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டனர். ஒருவேளை ஜோகோவிச் மற்றும் நடால் அரையிறுதிப் போட்டியில், அவரவர் எதிர்கொள்ளும் வீரர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றால், இறுதி ஆட்டத்தில் இருவரும் மோதினால் ஆட்டம் மிகுந்த சுவாரஸ்யத்துடன் நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுவரை நடால் மற்றும் ஜோகோவிச் 59 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 30 முறையும், நடால் 29 முறையும் வென்றுள்ளனர். சமீபத்தில் பிரஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இருவரும் மோதியதில், நடால், ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் வெற்றி பெற்றார்.
அதே சமயம் இருவரும் இறுதிப் போட்டியில் சந்தித்து கொண்டால், மறக்க முடியாத போட்டியாக இது பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.







