சென்னை எர்ணாவூர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தியாகராஜனின் மனைவி ராஜலெட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தியாகராஜன் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தந்தையை இறந்த செய்தியை அவரது மகனும், மகளும் தாயிடம் தெரிவிக்காமல் இருந்தனர். எனினும், சில மணி நேரங்களிலேயே கணவர் இறந்தது தெரியாமல் ராஜலெட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் கணவரும் மனைவியும் ஒரேநேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







