ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித்சிங் காலமானார். அவருக்கு வயது 82.
ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி நிறுவனர் மற்றும் தலைவருமான அஜித்சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு நுரையீரலில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அஜித் சிங் காலமானதாக அவரது மகன் ஜெயந்த் சவுதிரி அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங், 7 முறை மக்களவை உறுப்பின ராக இருந்தவர். வி.பி.சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரின் ஆட்சி காலத்தில மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் அஜித் சிங்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







