கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இன்று காலை வாடகை கார்கள் ஓட்டுநர்கள் நடத்திய திடீர் போராட்டத்தின் காரணமாக வாடகை கார்கள் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 30ம் தேதி (நேற்று) பெங்களூரூவில் 32 வயதான பிரதாப் எனும் வாடகை கார் ஓட்டுநர் திடீரென உயிரிழப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் இன்று காலை இதர வாடகை கார் ஓட்டுநர்கள் பெங்களூரூ நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக வாடகை கார் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரூ சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், விமான பயணிகள் தங்கள் தேவைகளுக்கு மாநகர பேருந்துகள், அல்லது தங்களது தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக மாநில அரசின் சுற்றுலாத்துறையின் வாடகை கார் ஓட்டுநரான பிரதப், நேற்று மாலை விமான நிலையத்திற்கு வெளியில் தனது காரில் உயிரிழப்பு க்கு முயன்றுள்ளதாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும், உயிரிழப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லையென்றும், மூத்த காவல்துறை அதிகாரி சி.கே.பாபு தெரிவித்திருந்தார்.







