பழைய சோறு குறித்த ட்வீட்; தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவிற்கு குவியும் பாராட்டு!

பழைய சோறு குறித்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். பழைய சோறு தான் பெரும்பாலும் 90s கிட்ஸ்களின் காலங்களில் காலை உணவாக இருந்தது. ஏதாவது பண்டிகை…

பழைய சோறு குறித்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

பழைய சோறு தான் பெரும்பாலும் 90s கிட்ஸ்களின் காலங்களில் காலை உணவாக இருந்தது. ஏதாவது பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இட்லி, தோசை, பூரி போன்ற உணவு வகைகளை கண்ணால் பார்க்க முடியும். இரவு நேரத்தில் மீதமாகும் சோற்றை மண்பானைகளில் தண்ணீர் ஊற்றி வைத்தால் அது காலையில் அமிர்தம் போன்ற பழைய சோறாக கிடைக்கும்.

பழைய சோறு, பச்சை மிளகாய், சின்னவெங்காயம் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவைக்கு நிகர் வேறு எதுவும் இருக்காது என்றே சொல்லலாம். அதுவும் வெயில் காலங்களில் மண் பானையில் வைத்திருக்கும் பழைய சோறுடன் தயிர், சின்ன வெங்காயம், பழைய கருவாட்டு குழம்பு என்று சாப்பிடும் போது அமிர்தம் போன்று இருக்கும். ஆனால் தற்போது பழைய சோறு என்ற ஒன்று இருந்த இடமே இல்லாமல் இருக்கிறது.

இதையும் படிக்கவும்: இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் திருடிய இளைஞர்! 

காலத்தின் ஓட்டத்தில் மக்கள் பாஸ்ட் புட் மற்றும் டிபன் வகைகளை தான் காலை நேரங்களில் எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது தற்போது டிரண்டில் இருக்கும் டயட் முறைகளை பின்பற்றி உணவு வகைகளை உண்கிறார்கள்.

https://twitter.com/svembu/status/1624636335943458823

இந்த நேரத்தில் தான் பிரபல மென்பொருள் நிறுவனமான ஷோகோ-வின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதிவில், எரிச்சலுடன் குடல் பிரச்னை என்ற ஐபிஎஸ் நோயால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் நிலையில், அந்நோய்க்கு எளிதான மருந்தாக பழைய சோறு இருக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நோய் தனக்கு இருந்ததாகவும், பழைய சோறு எனும் மாமருந்தால் நோய் குணமானதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பதிவு பெரிதும் உதவும். எனவே இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பல பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர். தாங்கள் மறந்திருந்த பழைய சோறு பற்றி நினைவூட்டியதற்கு நன்றி என்றும், பழைய சோறு பல வயிறு சம்பந்தமான முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு தரும் என்று தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் வேம்புவின் இந்த ட்விட்டருக்கு தற்போது பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.