#RainAlert | “தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் நாளை (ஆக.18)  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் (உள் மாவட்டங்களில்…

Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் நாளை (ஆக.18)  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் (உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும்,  கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

இந்நிலையில், 3 மாவட்டங்களில் நாளை (ஆக.18ம் தேதி) மிக கனமழைக்கும், 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #Turkey நாடாளுமன்றத்தில் அடிதடி! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு ரத்தக்காயம்!

நாளை மறுநாள் (ஆக.19ம் தேதி) கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்லில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. வரும் 20-ம்தேதி முதல் 23-ம்தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.