#STR-ன் 48-வது படம் – கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி வெளியிட்ட அப்டேட்!

STR 48வது திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி தெரிவித்தார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள்…

About Simbu 48, its art director S.S. Murthy's information has raised expectations.

STR 48வது திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி தெரிவித்தார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் சிறந்த வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48-வது படத்தில் நடிக்க உள்ளார். ஆனால், அந்த திரைப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால், சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமெனவும் இதனால் தீபிகா படுகோன் அல்லது மிருணால் தாக்குர் நடித்தால் நன்றாக இருக்குமெனவும் படக்குழு விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சிம்பு, தனது சமுக வலைதளப்பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதையும் படியுங்கள் :#Turkey நாடாளுமன்றத்தில் அடிதடி! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு ரத்தக்காயம்!

‘தங்கலான்’ திரைப்படத்தில் கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: “சிம்புவின் 48 ஆவது படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். அதுவும் பாகுபலி மாதிரியான வரலாற்று படமே. இந்தப் படம் எப்படியிருக்கு மென்றால் ராஜமௌலி, சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து இயக்குவது போலிருக்கும். அடுத்து ப்ளூ ஸ்டார் இயக்குநர் படத்திலும் பணியாற்றுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.