அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த பகுதிகளில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்.!

தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ;
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: 
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 
சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களிலிருந்து  மத்திய கொங்கன்வரை உள் கர்நாடகா  வழியாக  ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது.
02-04-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
03-04-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
04-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
05-04-2026 மற்றும் 06-04-2026:  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07-04-2026: தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 
இன்று (02-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
நாளை (03-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் 02-04-2026 முதல் 06 -04-2026 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.