GOLD RATE | தங்கம் விலை மீண்டும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன.?

சென்னையில் ஆபரண் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கேற்ப தங்கம் விலையானது மாற்றம் கண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலையானது இரு முறை சரிந்தது. அதன் படி நேற்று காலை தங்கம் விலையானது கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. தொடர்ந்து மாலையிலும் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1.600-ம் சரிந்தது.

இதன் படி நேற்று மொத்தமாக கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன் படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,850-க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.