5 சிறுநீரகங்களுடன் வாழும் தொழிலதிபர்

ஐந்து சிறுநீரகங்களுடன் தொழிலதிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். வங்கதேசத்தைச் சோ்ந்தவர் தீபன் (41). தொழிலதிபர். இவருக்கு சிறுவயதிலேயே சிறுநீர கங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் 1994 ஆம் ஆண்டு உறவினர் கொடுத்த சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சில…

ஐந்து சிறுநீரகங்களுடன் தொழிலதிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.

வங்கதேசத்தைச் சோ்ந்தவர் தீபன் (41). தொழிலதிபர். இவருக்கு சிறுவயதிலேயே சிறுநீர கங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் 1994 ஆம் ஆண்டு உறவினர் கொடுத்த சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சில வருடங்களில் அந்த சிறுநீரகம் செயல்படாததால், மற்றொரு உறவினர் கொடுத்த சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இரண்டாவதாக பொருத்தப்பட்ட சிறுநீரகமும் செயலிழந்ததால் மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவா் சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்தநாளம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா் மருத்துவா் சரவணன் தலைமையிலான டாக்டர்கள் குழு, அவர் உறவினர் ஒருவருடைய சிறுநீரகத்தை தானமாக பெற்று வெற்றிகரமாகப் பொருத்தினா். இதையடுத்து, அவர் வயிற்றில் 5 சிறுநீரகங்கள் உள்ளன.

இதுதொடா்பாக டாக்டா் சரவணன் கூறும்போது, மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சிறுநீரகமும் செயலிழந்தால், மூன்றாவது முறைகூட மாற்று சிறுநீரகத்தை பொருத்த முடியும். வயிற்றில் உள்ள குடலுக்கு பின்னால்தான் மாற்று சிறுநீரகத்தை வைக்க முடியும் என்பதால், தீபனுக்கும் அப்படி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் வயிற்றில், 2 சிறுநீரகங்கள் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வைக்கப்பட்ட 3 சிறுநீரகங்கள் என மொத்தம் 5 சிறுநீரகங்கள் உள்ளன. அவா் ஆரோக்கியமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.