முக்கியச் செய்திகள் தமிழகம்

குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100% செயல்படுத்தப்படும்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100 சதவீதம்
செயல்படுத்தப் படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு சென்னை சாந்தோம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய குடற்புழு
நீக்கும் திட்டத்துக்கு அடித்தளமிட்டது சென்னை மாநகராட்சிதான் எனக்கூறினார்.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த திட்டமாக இருந்தாலும் அதை 100 சதவீதம்
வெற்றியடையச் செய்யும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், குடற்புழு
நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

“சென்னையில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை” – சங்கர் ஜிவால்

Halley karthi

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.64 லட்சம் கடன்” – நிதியமைச்சர் பிடிஆர்

Halley karthi

வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

Ezhilarasan