சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறைக்கு வரவில்லை என்றும், அதிகாரமிக்க நபர்களை இதில் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னைப் பெருநகர பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் கடந்த 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட CUMTA, மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பலவகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
மேலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் முதலமைச்சரை தலைவராகக் கொண்டு செயல்படவுள்ளது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் (CUMTA) உறுப்பினர் செயலராக இருந்து விருப்ப ஒய்வுபெற்ற கிருஷ்ணகுமார் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 2010-ல் தொடங்கப்பட்டாலும் 2019-ம் ஆண்டு தான் விதிகள் உருவாக்கப்பட்டது என்றார்.
போக்குவரத்துத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை என கடந்து, தற்போது முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். எங்கு சாலை போடுவது? எங்கு வாகனங்கள் நிறுத்த வேண்டும்? எதை ஒருவழிப்பாதையாக மாற்றுவது என இந்த குழு முடிவெடுக்க வேண்டும். உலக பொருளாதார மன்றம், உலக வங்கி நிதியுதவி அளிக்கும்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர் என தெரிவித்தார்.

நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் வலியுறுத்தியதால் 2010-ம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் நிதியுதவி பெறும்போது இதுபோன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும் என நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றனர். ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவதால் மெட்ரோ, நெடுஞ்சாலைகள் என துறைகள் தனித்தனியாக செயல்படுகின்றது என்றார்.
2010-ம் ஆண்டு இதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (CMDA) போன்று இருந்திருக்கும். மேலும் போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்கவேண்டுமென்று உண்மையாக நினைத்தால் CUMTA நடைமுறைக்கு வரும். அதிகாரமிக்க அமைப்பாக ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் இருக்க வேண்டும்உயர் பதவிகளில் அதிகாரமிக்க நபர்களை நியமிக்க வேண்டும் இல்லையெனில் இதனை நகர்த்தி செல்வதில் சிரமம் உள்ளது என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







