ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து, ஜெயலலிதாவின் சகோதரர் தீபக் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நாளை திறக்கப்படும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபக் மனுதாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் அடுத்த திங்கட்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
(மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லம் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அவர் தனது மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக, அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில், சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரானைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி, தீபக் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிட்டார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் அடுத்த திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.