இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 137 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரத்து 305 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை, நாடு முழுவதும் 20 லட்சத்து 29 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.